பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20120106

நெல் சாகுபடியில் பயிர் பாதுகாப்பு

குருத்துப்புழு: இதனை அழிக்க ஏக்கருக்கு 400 மில்லி மானோகுரோட்டோபாஸ் அல்லது 100 மில்லி டைமக்ரான் இவைகளில் ஏதாவது ஒன்றினை தெளிப்பானுக்கு தக்கபடி நீருடன் கலந்து பயிருக்கு தெளிக்க வேண்டும்.
இலைசுருட்டுப்புழு: இந்தப்புழு பயிரில் கதிர் பருவத்தின்போது கடுமையாகத் தாக்குகின்றது. கதிர் பருவத்தின்போது மேகமூட்டமும், தூறலும் இருந்தால் நிச்சயமாக இந்தப்புழு தாக்குதல் நடக்கும். இதைத் திறன்பட கட்டுப்படுத்த வேண்டும். இந்தக்கொடிய பூச்சியைத் தடுக்க 300 மில்லி எண்டோசல்பான் அல்லது மானாகுரோட்டோபாஸ் 250 மில்லி அல்லது ஜோலோன் 600 மில்லி அடிக்க வேண்டும்.
இலை உறை அழுகல் நோய்: கதிர் தோன்றும் சமயத்தில் இந்த நோய் தோன்றும். முதலில் தொண்டை பாகத்தில் கதிர்கள் பிடித்துக்கொள்ளப்பட்டு அவைகள் வெளியே வராமல் தத்தளிக்கும். சில கதிர்கள் தொண்டைக்குள் பாதியும் மீதி வெளியேவந்துதொங்கிக் கொண்டு இருக்கும். இலைப்பட்டையின் மேல் சாக்லேட் மிட்டாய் போன்ற அடர்ந்த பழுப்புநிறம் கொண்ட புள்ளிகள் தோன்றும். இவைகளில் ஒன்றுடன் ஒன்று இணைந்து தோகை முழுவதும் பரவி இறுதியில் கதிர் உறை முற்றிலும் அழுகிவிடும். இந்த நிலையிலும் நோயினை அழிக்க 100 கிராம் பவிஸ்டின் அல்லது 200 மில்லி ஹீனோசன் அல்லது 400 கிராம் டைத்தேன் இவைகளில் ஏதாவது ஒன்றினை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் உபயோகித்து ஒரு ஏக்கர் பயிரின் மேல் தெளிக்க வேண்டும். அதிகம் தூர்கள் கட்டும் பருவத்திலும் மறுபடியும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
பேக்டீரியல் இலைக்கருகல் நோய்: நோய் தாக்கும்போது நாற்றுக்களின் இலைகளில் வட்டவடிவ மஞ்சள் நிறப்புள்ளிகள் உண்டாகி, ஒன்றுடன் ஒன்று இணைந்து நாற்றுக்கள் கருகிவிடும். நோயைத்தடுக்க 120 கிராம் ஸ்டெப்டோமைசின் சல்பேட், டெட்ராமைசின் சல்பேட்கலவை மற்றும் 200 கிராம் தாமிர ஆக்சி குளோரைடு இவைகளை தெளிப்பானுக்கு தக்கபடி நீருடன் கலந்து ஒரு ஏக்கர் பயிருக்குத் தெளிக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த பயிர்களில் இலையின் நுனியில் இந்நோய் தோன்றி ஓரங்கள் மூலம் கீழ் நோக்கிப் பரவும். முதலில் நீர் கோர்த்த பகுதியாகத் தென்படும். தீவிரமாகத் தாக்கும்போது முழு இலைப்பரப்பும் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். இலைகள் கருகிவிடும். இந்த நோய் நாற்றங்கால் தருணம் பயிர் தூர்கட்டும் சமயம், தொண்டைக் கதிர் சமயம் ஆகிய கட்டங்களில் தோன்றும். அக்ரிமைசின் அல்லது பிளாண்டோமைசின் இவைகளில் ஏதாவது ஒன்றினை ஏக்கருக்கு 120கிராம் என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். உடனே பைடிலான் மருந்து 600 கிராம் அளவினை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இயற்கை முறை கட்டுப்பாடு: விரும்பும் விவசாயிகள் பூஞ்சாள நோய்கள் வராமல் தடுக்க பூஞ்சாள உயிர்க்கொல்லியாகிய சூடோமோனஸ் புளோரசன்ஸ் அதாவது பி.எப். பவுடரை பயன்படுத்தலாம். பி.எப். பவுடர் விதையின் மேல்புறம் மற்றும் மண்வழி பரவும் வேரழுகல், தூர்வாடல், தண்டழுகல், இலைக்கருகல், குலைநோய், இலையுறை அழுகல் நோய் போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துகின்றது. நெல் பயிரில் கீழ்க்கண்டபடி உபயோகிக்கலாம்.
-எஸ்.எஸ்.நாகராஜன்
நன்றி:தினமலர்
 

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...