பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20120106

புதிய ஊட்டமேற்றிய கம்போஸ்ட் தொழு உரம்

செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்: மாட்டுச்சாணம்-250 கிலோ, பண்ணைக் கழிவு-250 கிலோ, யூரியா-5.5 கிலோ, அசிட்டோபேக்டர் அல்லது அசோஸ் பைரில்லம் உரம்-1 கிலோ, டி.ஏ.பி. உரம்-25 கிலோ அல்லது இப்கோ 20 20 40 கிலோ அல்லது ராக் பாஸ்பேட் 140கிலோ, பாஸ்போ பேக்டீரியம் 1 கிலோ, ஜிப்சம்-100 கிலோ.
தழை, மணி, கந்தகம், சுண்ணாம்பு சத்துக்கள் மற்றும் உயிர் உரங்கள் கொண்ட மதிப்பு கூட்டப் பட்ட தொழு உரம் தயாரிக்கும் முறை: கம்போஸ்ட் தயாரிக்க உதவும் குழி முற்றிலும் சூரிய வெளிச்சம் படும் மேடான இடத்தில் அமையும்படியாக தேர்வு செய்ய வேண்டும். 10 அடி நீளம், 5 அடி அகலம், 3 அடி ஆழம் உள்ள குழியை எடுக்க வேண்டும். சோகை தாள் மற்றும் பயிர் கழிவுகள் 250 கிலோ மற்றும் சாணம் 250 கிலோ சேகரிக்க வேண்டும். 5.5 கிலோ யூரியா, 40 கிலோ இப்கோ 20:20 அல்லது இப்கோ டிஏபி 25 கிலோ அல்லது ராக்பாஸ்பேட் 140 கிலோ. இப்கோஜிப்சம் 100 கிலோ ஆகியவற்றை பசும்சாண கரைசலுடன் கலந்து கெட்டியான கரைசலாக்கிக் கொள்ள வேண்டும்.
குழியில் ஒரு வரிசை மக்கிய கழிவுகள் இட்டு அதற்கு மேல் ஒரு வரிசை சாண உரக்கரைசல் தெளிக்க வேண்டும். இதுபோன்ற 16 வரிசைகள் இட்டு குழியினை நிரப்பி முடிக்க வேண்டும். மேலாக கெட்டியான சாண கரைசல் கொண்டு மூடிவிட வேண்டும். மழை மற்றும் காற்றிலிருந்து பாதுகாக்க குழி குவியலை முழுவதும் பாலிதீன் தாள் கொண்டு மூட வேண்டும்.
குழி இடப்பட்ட கழிவுகள் தன்னிடத்தே கொண்டுள்ள ஈரத்தினை பயன்படுத்தி, மக்கி, ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு ஆரம்பிக்கின்றது. மூன்று அல்லது நான்கு வாரங்கள் கழிந்த பின்னர் குழி குவியலில் உள்ள கழிவுகளை மேலும் கீழுமாக கலந்துவிட்டு மூடிவிட வேண்டும். கோடைகாலமாக இருந்தால் கழிவு கலவையில் 60 முதல் 70 விழுக்காடு ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
புதிய ஊட்டமேற்றிய கம்போஸ்ட் தொழு உரத்தின் பயன்கள்: மண் வளத்தை அதிகப்படுத்தி அங்ககச் சத்தை கூட்டுகிறது. மண் ஈரத்தன்மையை காக்கிறது. தழை, மணி, கந்தகம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்களை கூடுதலாக தருகின்றது. தழை, மணிச்சத்து கிடைக்க உதவும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை கூட்டுகிறது. மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தினை பயிருக்கு கிடைக்க வழிவகை செய்கிறது. மானாவாரி நிலங்களுக்கு மிகவும் ஏற்றதாகும். தயாரிக்க செலவு ரூ.1000. ஆனால் 5 மடங்கு நன்மையை அதிகரிக்கின்றது. கனிம உரங்களின் பயன்பாட்டு திறனை அதிகரிக்க இந்த தொழு உரம் மிகவும் உதவுகிறது. தொடர்புக்கு: மணிகண்டன், இப்கோ மண்டல அலுவலகம், கோவை. போன்: 0422-224 0339, 224 8633.
-கே.சத்தியபிரபா, உடுமலை.
நன்றி:தினமலர் 

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...