பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20120110

புதிய மியூசிக்வேவ் போன் அறிமுகம்

ஏர்செல் நிறுவனம் மியூசிக்வேவ் எப்எம் என்ற புதிய போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர்செல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மியூசிக்வேவ் எப்எம் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
.
கோவையில் நடந்த இதன் அறிமுக விழாவில் சினிமா நடிகர் சூர்யா புதிய செல்போனை அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட ஏர்செல் நிறுவன தென்பிரிவு இயக்குனர் பாஸ்கர் பேசியதாவது: சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஏர்செல் நிறுவனம் மியூசிக் வேவ் செல்போனை அறிமுகப் படுத்தியுள்ளது. புதுமையான தொழில்நுட்பம், வாய்ஸ் மற்றும் டேட்டா சர்வீஸ், எப்.எம்.வாயிலாக இனிய இசை ஆகிய வசதிகளுடன் இந்த செல்போன் ஜி225 மற்றும் ஜி240 என 2 மாடல்களில் கிடைக்கும்.

ஏர்செல் நிறுவனம் இந்தியா முழுக்க 1.5 கோடி சந்தாதாரர்களை கொண்டுள்ளது. மேலும் நிறுவனம் லைப்டைம் வேலிடிட்டி முதல் 12 மாதத்திற்கு 75 நிமிடம் மற்ற மொபைலுக்கு இலவசமாக பேசும் வசதி, டயல் டியூன், அலர்ட்டர் ஆகியவற்றுடன் 5 மொபைல் எண்களுக்கிடையே நிமிடத்துக்கு 20 பைசா கட்டணத்தில் பேசும் வசதியும் அறிமுகப்படுத்தியுள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...