பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20120114

பொங்கல் தினத்தில் பிறந்த பென்னி குக்..கொண்டாடி மகிழ்வோம்-வைகோ

இந்த ஆண்டு தைப் பொங்கலை, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய மாமனிதர் பென்னி குவிக்குக்கு நன்றி கூறும் விழாவாக ஆங்காங்கு அவரது உருவப்படங்களுக்கு மாலை சூட்டி, மலர்கள் தூவி, நன்றி காட்ட வேண்டுகிறேன் என்று பொது மக்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழ்நாட்டின் வாழ் வாதாரங்களுள் மிக முக்கியமான ஒன்றான முல்லைப் பெரியாறு அணையை அற்புதமாக அமைத்து தந்த இங்கிலாந்து நாட்டின் பொறியாளர் பென்னி குவிக், தமிழக மக்கள் என்றென்றும் நன்றி கூறுகின்ற மகத்தான மனிதர் ஆவார்.

அந்த உத்தமரின் பிறந்த நாள், ஜனவரி 15 ஆகும். முல்லைப் பெரியாறு தண்ணீரால் வாழ்வு பெறும் பல கிராமங்களில், அந்த நாளை, பொங்கல் திரு நாளாக ஏற்கனவே கொண்டாடுகின்றார்கள்.

முல்லைப் பெரியாறு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து, ஒட்டு மொத்த தமிழகமும் கேரள அரசின், அரசியல் கட்சிகளின் அக்கிரமப் போக்கை எதிர்த்து, கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து, நம் உரிமைக்காக்க, கிளர்ந்து எழுந்து விட்ட இன்றையச் சூழலில் இந்த ஆண்டு தைப் பொங்கல், பென்னி குவிக் பிறந்த நாளான ஜனவரி 15ல் அமைந்திருப்பது, இயற்கையாகவே மனதுக்கு மகிழ்ச்சியையும், உறுதியையும் தருகின்றனது.

நெடுங்காலமாகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்ற திருவிழாவான பொங்கல் விழாவில், நெல், கரும்பு, முந்திரி, தானியங்கள், காய்கறிகள், பழங்கள் அனைத்தையும் விளைவிக்கும் பூமிக்கும், உழவர்களுக்கு உதவிடும் எருதுகள், பசுக்களுக்கும் நன்றி தெரிவித்துப்படையல் இடுவது நமது வழக்கம்.

எனவே, இந்த ஆண்டு தைப் பொங்கலை, மாமனிதர் பென்னி குவிக்குக்கு நன்றி கூறும் விழாவாக ஆங்காங்கு அவரது உருவப்படங்களுக்கு மாலை சூட்டி, மலர்கள் தூவி, நன்றி காட்ட வேண்டுகிறேன்.

பொறியாளர் பென்னி குவிக், தமிழகத்துக்கு ஆற்றிய அருந் தொண்டுக்கு, பெருமை சேர்க்கும் விதத்தில், தமிழக அரசு, அப் பெருமகனுக்கு மணி மண்டபமும், சிலையும் எழுப்ப முடிவு எடுத்து இருப்பது, பாராட்டுக்கு உரியது ஆகும். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், பென்னி குவிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையில், கேரளம் சேதம் விளைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

புதிய அணை எனும் அவர்களின் வஞ்சகத் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று மத்திய அரசுக்கும், கேரளத்துக்கும் தமிழகத்தின் உறுதியை பிரகடனம் செய்யும் விதத்தில், இந்த மணிமண்டபம் நமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார்.

சரத்குமார் பாராட்டு

இதேபோல் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் நினைவாக லேயர் கேப்பில் ரூ.1 கோடி செலவில் சிலையும், மணிமண்டபமும் அமைக்க இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துகளை விற்று அதன்மூலம் கிடைத்த பணத்தில் முல்லை பெரியாறு அணையை அவர் கட்டி முடித்தார். இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விவசாய, குடிநீர் பிரச்சனை தீ்ர்க்கப்பட்டது.

பொதுவாக மணி மண்டபம் அமைப்பது நமது தேச தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் தான். அதே நேரம் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கர்னல் பென்னிகுக் என்ற தனி மனிதனுக்கு நன்றி கடனாக சிலையும், மணிமண்டபமும் அமைக்க முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...