பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20120108

2012இல் ஆடைக்கைத்தொழில் துறையின் ஏற்றுமதி வருமானம் அமெ. டொ. 4 பில்லியனை எட்டும்

இலங்கை:
சர்வதேச நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த போதிலும், இலங்கையின் ஆடைக்கைத்தொழில் துறையின் மூலமான ஏற்றுமதி வருமானம் சீராக அதிகரித்த வண்ணமுள்ளதென ஜாஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வமைப்பின் செயலாளர் நாயகம் டியுலி கூரே கருத்து தெரிவிக்கையில், “2015 ஆம் ஆண்டளவில் 4 பில்லியன் ரூபாவை வருமானமாக திரட்டும் வகையில் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்த இலக்கு 2011 ஆம் நிதி ஆண்டு நிறைவடையும் முன்னர் (எஞ்சிய இரு மாத காலப்பகுதியினுள்) எய்தக்கூடிய நிலை காணப்படுகிறது. கடந்த வருடத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி வருமானம் 41 வீதத்தினாலும், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வருமானம் 25 வீதத்தினாலும் அதிகரித்துள்ளது. இந்த பெறுமதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 1.813 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அமெரிக்காவில் 1.33 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதி வருமானம் 340 பில்லியன் டொலர்களாகவும் 2011 இன் ஜனவரி – ஒக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் பதிவாகியிருந்தது. இதனடிப்படையில் 2011 ஆம் ஆண்டின் முதல் 10 மாத காலப்பகுதியில் ஆடைக்கைத்தொழில் துறையின் மொத்த ஏற்றுமதி வருமானமாக 3489 பில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது" என்றார்.

3 தசாப்த காலமாக கட்டியெழுப்பிய நம்பிக்கை, தர நிர்ணயம், தொழிற்சாலைகளின் தரங்களை கட்டியெழுப்புதல் போன்றவற்றுக்கு மேலதிகமாக சீனாவின் விலைகள் அதிகரித்திருந்தமை, பங்களாதேஷ் நாட்டில் தற்போதைய நிலை மற்றும் எகிப்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை போன்றன தேசிய ஆடை உற்பத்தித்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியிருந்தன.

2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் நீக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, இந்த துறை வீழ்ச்சியடைந்துவிடும் என எதிர்வுகூறப்பட்டிருந்த போதிலும், அந்த எதிர்வுகூறல்களை தகர்க்கும் வகையில், 2011 இல் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மேலதிகமாக இதர நாடுகளுக்கான ஏற்றுமதி 57 வீத வளர்ச்சியை காணப்பிக்க முடிந்திருந்தது.

ஆடைக்கைத்தொழில்துறையை விருத்தி செய்யும் வகையில், அரசாங்கத்தின் பங்களிப்பாக புதிய வர்த்தக சந்தைகளான சீனா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் போன்ற புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்பத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. இலங்கையின் ஆடைக் கைத்தொழில்துறையானது சர்வதேச கொள்வனவாளர்களுக்கு பிரதான மூன்று அனுகூலங்களை வழங்குகிறது. முதலாவதாக, அதிவேகமான விநியோகம் அமைந்துள்ளது. இதற்கு; உலகில் இலங்கையின் அமைவிடம் காரணமாக அமைந்துள்ளது. உற்பத்தியிலிருந்து விநியோகம் வரை இலங்கை ஆடைக் கைத்தொழில்துறையானது நேரத்தை குறைப்பதற்கான அணுகுமுறைகளை கையாண்டு வருகிறது.

இரண்டாவது அனுகூலமாக, கேள்விக்கு ஏற்ப பாரிய கொள்ளளவுகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்வனவாளர்களுக்கு வழங்கக்கூடிய திறன் காணப்படுகிறது. கடந்த நான்கு தசாப்த காலமாக உலகத்தரம்மிக்க தயாரிப்புகளை கொள்வனவாளர்களுக்கு இலங்கை ஆடைக் கைத்தொழில் துறை வழங்கி வருகிறது. மூன்றாவது அனுகூலமாக, இலங்கையில் காணப்படும் சாதகமான வர்த்தக கொள்கைகளும் முதலீட்டாளர் சூழ்நிலையுமாகும். தெற்காசியாவில் மிகவும் கட்டுப்பாடுகள் குறைந்த பொருளாதார நிலை காணப்படும் நாடாக இலங்கை கணிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் மற்றும் முதலீட்டு உறுதிப்படுத்தல் உடன்படிக்கைகள் போன்றன வெளிநாட்டு முதலீட்டாளர்களை பெருமளவில் கவரும் வகையில் அமைந்துள்ளன என ஜாஃப் (JAAF) அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
நன்றி:வீரகேசரி,இலங்கை.

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...