பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20120108

இடுக்கி அணை இடியும் அபாயம் கேரள அரசின் அலட்சியம்!

(முல்லைப் பெரியாறு அணையின் வலிமையை ஆராய்வதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் துணைக்குழுவான உயர்நிலை தொழில்நுட்பக் குழு பெரியாறு அணையை முழுமையாக சோதனை நடத்தியதோடு நிற்கவில்லை. பெரியாறு அணைக்குக் கீழே உள்ள இடுக்கி அணைக்குக் கீழே உள்ள செருதோணி, குளமாவு ஆகிய அணைகளையும் முழுமையாகப் பரிசோதித்தது. கேரளத்தில் உள்ள மிகப்பெரிய அணையான இடுக்கி அணை அதனுடைய பாதுகாப்புக்காக வகுக்கப்பட்ட 16 செயல்முறைத் திட்டங்களை சரிவரச் செயல்படுத்தாதின் விளைவாக அபாயம் ஏற்பட்டுள்ளது என கேரள நீர்ப்பாசனத் துறையின் உயர்அதிகாரி 2008ஆம் ஆண்டு அரசுக்கு அறிக்கைக் கொடுத்துள்ளார். அதற்குப் பின்னரும் கூட இடுக்கி அணையை மராமத்து செய்யும் வேலையை கேரள அரசு தொடங்கவில்லை. இந்த நிலையில் உயர்தொழில்நுட்பக் குழு இடுக்கி அணையை பரிசோதித்தது கண்டு கேரள அரசியல்வாதிகள் அச்சம் அடைந்திருக்கிறார்கள். கிணறு வெட்ட பூதம் புறப்பட்டக் கதையாகிவிட்டதே என புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.)

கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் டோனி ஜார்ஜ் என்பவர் அண்மையில் பெரியாறு அணையில் நீர்க்கசிவு உள்ளதா என் பதை ஆய்வு செய்து அப்படி நீர்க்கசிவு எதுவும் இல்லை என அறிக்கை வெளியிட்டார். இதைக் கண்டு கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் கடும் கோபமடைந்தார். பெரியாறு அணையில் நீர்க்கசிவு அபாயகரமான அளவு உள்ளது எனத் திரும்பத் திரும்ப கேரள அரசு கூறிவரும் நிலையில் அந்த அரசைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒரு வரே அதை மறுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டது தர்மசங்கட மான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது. எனவே, கேரள அரசின் ஆணையின் பேரில் டோனி ஜார்ஜ் மே 14ஆம் தேதி யன்று மீண்டும் அணைப் பகுதியில் ஆய்வு நடத்தினார். அணையின் பின் பகுதியில் சில இடங்களில் செடி கொடிகள் வளர்ந்துள்ளன என்றும் அவற்றை அகற்றினால்தான் நீர்க்கசிவு உண்டா இல்லையா என்பது துல்லியமாகத் தெரியும் எனவும் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

கேரள நீர்ப்பாசனத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு முன் னுக்குப்பின் முரணான அறிக்கைகள் வெளியிட்டு இருப்பது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக் கிறது. பெரியாறு அணைப் பாதுகாப்பு பற்றிய உண்மையான விவரங்களை கேரள அரசு திட்டமிட்டு மறைக்கிறது என்பது அம்பலமாகி உள்ளது.


இடுக்கி அணை
பெரியாறு அணை பற்றி பொய் யான குற்றச்சாட்டுக்களைக் கேரள அரசு கூறிவரும் இந்த வேளையில், கேரள மாநிலத்திலேயே பெரிய அணையான இடுக்கி அணை உண்மை யில் அபாயகரமான நிலையில் இருப்ப தாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. இடுக்கி அணை கட்டப்படும் போதே அதனுடைய பாதுகாப்புக்கான 16 செயல்முறைத் திட்டங்களோடு கட் டப்பட்டது. ஆனால் அந்த செயல் முறைத் திட்டங்கள் தற்போது சரிவர செயல்படவில்லை. 1990ஆம் ஆண்டிற் குப் பிறகு அணையின் பாதுகாப்பு குறித்து எந்த விவரமும் ஆராயப்பட வில்லை. இது மிகமிக அபாயகரமான தாகும்.

முல்லைப் பெரியாறு அணை தகர்ந்தாலோ இடுக்கி அணைக்கு ஆபத்து நேர்ந்தாலோ என்ன நேரும் என்பதை குறித்து அச்சத்தை எழுப்ப நான் விரும்பவில்லை. ஆனால் மாநிலத் திலேயே பெரிய அணையான இடுக்கி அணையை கேரள மின்வாரியம் சரிவர பராமரிக்கவில்லை. பல்லாயிரக்கணக் கான மக்களின் பாதுகாப்பையும் மாநிலத் தின் வளத்தையும் பொறுத்த இந்த பிரச்சி னையில் மின்வாரியத்தின் செயற்பாடு வருந்தத்தக்கதாகும். இந்த நிலைமையில் அணையைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய அவசரமான நடவடிக்கைகள் குறித்தோ அல்லது அதற்காகும் பெரும் செலவு குறித்தோ பேசுவதை நான் தவிர்க்க விரும்புகிறேன். அணையை சரிவர பராமரிக்க கேரள மின்வாரியம் அக்கறையற்று இருக்கும்போது அது பற்றியெல்லாம் பேசுவது வீண் வேலை யாகும் என்னுடைய கட்டுரையை முடிக்கும் முன்பு பொறியியல் அறிஞர் நிகுயன் என்பவர் அணைகள் "சரிவர பராமரிக்கப்படாமலோ அல்லது கண் காணிக்கப்படாமலோ போனால் அபாயத் தின் அளவு கூடும்'' என்று குறிப்பிட்டி ருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உண்மையில் இடுக்கி அணை சரிவர பராமரிக்கப்படாமல் நீர்க்கசிவுகள் ஏற்பட்டு இடியக்கூடிய அபாயகரமான நிலையை மூடி மறைத்த கேரள அரசு பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக திரும்பத் திரும்பக் குற்றம் சாட்டி வருகிறது என்பதை மேற்கண்ட கேரள பொறியியல் அறிஞரின் ஆய்வு அம்பலப்படுத்தி இருக்கிறது.


நன்றி:தென்செய்தி

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...