பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20120114

2011ல் இரட்டிப்பான வோக்ஸ்வேகன் விற்பனை வளர்ச்சி


கடந்த ஆண்டு மாருதி உள்ளிட்ட கார் நிறுவனங்களின் கார் விற்பனை குறைந்த நிலையில், வோக்ஸ்வேகன் குழுமத்தின் கார் விற்பனை இரட்டிப்பாகியுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் வெகு வேகமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் யுக்தியே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு வோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் ஆடி, ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் ஆகிய மூன்று நிறுவனங்களின் ஒட்டுமொத்த கார் விற்பனை 109.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறுகிய காலத்தில் அந்த நிறுவனம் வேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 53,341 கார்களை விற்பனை செய்திருந்த அந்த குழமம் கடந்த ஆண்டில் 1,11,623 கார்களை விற்பனை செய்துள்ளது.

இதில், கடந்த 2010ல் 30,319 கார்களை விற்பனை செய்திருந்த வோக்ஸ்வேகன் கடந்த ஆண்டு 76,107 கார்களை விற்பனை செய்துள்ளது. இதேபோன்று, ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை 20,019 கார்களிலிருந்து 30,005 கார்களாக அதிகரித்துள்ளது.

வோக்ஸ்வேகன் குழுமத்தின் சொகுசு கார் பிராண்டான ஆடி நிறுவனத்தின் கார் விற்பனை 3,003 கார்களிலிருந்து கடந்த ஆண்டு 5,511 கார்களாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 21 கார் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் வோக்ஸ்வேகன் குழுமம் பெரிய அளவிலான வர்த்தக விரிவாக்கத்தை இந்தியாவில் மேற்கொள்ள உள்ளது. இதற்காக, இந்தியாவில் புதிதாக ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...