பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20120114

விரைவில் பைக் ரைடர்களுக்கான ஏர்பேக்குகள்: டெய்னீஸ் அறிமுகப்படுத்துகிறது


கார்களில் உள்ளது போன்று விபத்துக்களின்போது மோட்டார்சைக்கிள் ரைடர்களை பாதுகாக்கும் வகையில்,புதிய ஏர்பேக்குகளை டெய்னீஸ் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

விபத்துக்களின்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. குறி்ப்பாக, நகர்ப்புறங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில், கார்களில் உள்ளது போன்று மோட்டார்சைக்கிளுக்கான புதிய ஏர்பேக் தொழில்நுட்பத்தை இத்தாலியை சேர்ந்த டெய்னீஸ் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது.

ஆனால், இந்த ஏர்பேக்குகள் மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொள்ளும் வீரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

வாலண்டினோ ரோஸி உள்ளிட்ட பல மோட்டோ ஜிபி மோட்டார்சைக்கிள் பந்தய வீரர்கள் இந்த ஏர்பேக்குகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சாதாரண மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கும் பயன்படும் வகையில் புதிய ஏர்பேக்குகளை டெய்னீஸ் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

டி-ஏர் ஸ்டீரிட் என்ற பெயரில் விற்பனைக்கு வரும் இந்த புதிய ஏர்பேக்குகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் பயன்படும் என்று டெய்னீஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஏர்பேக் தொழில்நுட்பம் மூன்று பிரிவாக செயல்படுகிறது. முதலாவதாக கன்ட்ரோல் யூனிட் ஒன்று இருக்கிறது. இது மோட்டார்சைக்கிளில் பொருத்திக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, ரைடர்கள் அணிந்து கொள்வதற்கான ஏர்பேக் ஜாக்கெட்டுகள். பேட்டரி மூலம் கேஸ் நிரப்பும் வகையில் இந்த ஏர்பேக் ஜாக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது, மோட்டார்சைக்கிள் இருக்கையின் கீழ் பொருத்திக்கொள்ளும் ஆக்சிலோமீட்டர் சென்சார்கள். இந்த சென்சார்கள் இருக்கையில் ரைடரின் எடையை பொருத்து செயல்படும் வகையில் இருக்கிறது.

ஒருவேளை விபத்து நிகழ்ந்தால் இருக்கையின் கீழ் உள்ள ஆக்சிலோமீட்டர் மூலம் கன்ட்ரோல் யூனிட்டுக்கு தகவல் பரிமாறப்படுகிறது. கன்ட்ரோல் யூனிட் உடனடியாக ஏர்பேக்கில் உள்ள பேட்டரியை தூண்டுகிறது.

இதைத்தொடர்ந்து, ஏர்பேக்கில் முழுவதும் வாயுவை நிரப்பி ரைடர் கீழே விழுந்தாலும் பாதுகாக்கும்.இந்த நவீன தொழில்நுட்பம் கொண்ட ஏர்பேக் தொழி்லநுட்பம் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்துவிடும்.
மேலும், ஏர்பேக்கில் பொருத்தப்படும் பேட்டரி 5 மணிநேரம் சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் வரை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் நடைபெறும் விபத்துக்களில் அதிக உயிரிழப்புகள் மோட்டார்சைக்கிள் விபத்து மூலம் நடக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய ஏர்பேக்குகள் மோட்டார்சைக்கிள் ரைடர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...