பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20111229

இந்திய சந்தையை 'ஆக்கிரமிக்க' வரும் எலக்ட்ரிக் கார்கள்!

Mahindra Reva
சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, பாக்கெட்டிலுள்ள பணத்திற்கும் பங்கம் விளைவிக்காத பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பதில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா மாறி வருகிறது.

எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன.

முன்னணி நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்திய சந்தையை ஆக்கிரமிக்க உள்ளன. சந்தையில் பரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னணி நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள் பற்றிய தொகுப்பு இது:

ரேவாNXR: எலக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் முதலில் அறிமுகப்படுத்தி சூடுபட்டுக்கொண்டது மஹிந்திரா நிறுவனம். டெல்லி மற்றும் பெங்களுரில் அறிமுகப்படுத்தப்பட்ட ரேவா எதிர்பார்த்த அளவு விற்பனையாகவில்லை.

இதையடுத்து, 4பேர் அமர்ந்து செல்லக்கூடிய ரேவா NXR மற்றும் 2 பேர் அமர்ந்து செல்லக்கூடிய ரேவா NXG எலக்ட்ரிக் கார்களை இப்போது மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது மஹிந்திரா. மணிக்கு அதிகப்பட்சம் 105 வேகத்தில் செல்லும திறன் கொண்ட ரேவா NXR காரில், லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ., பயணம் செய்யலாம்.

டொயோட்டோ பிரையஸ்: இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட ஹைபிரிட் எலக்ட்ரிக் கார் பிரையஸ். ஏரோடைனமிக் வடிவமைப்பு கொண்ட பிரையசில் 100ps திறனை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், எலக்ட்ரிக் மோட்டாரும் சேர்ந்து காரை இயக்கும். இதில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் வாட்டர் பம்ப் எரிபொருள் சிக்கனத்தைத் தர வல்லது.

செவர்லெ வோல்ட்: ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள எலக்ட்ரிக் கார் செவர்லெ வோல்ட். ஒரு முறை சார்ஜ் செய்தால் 64 கி.மீ.,வரை செல்லும் வோல்ட், வழியில் சார்ஜ் தீர்ந்துவிட்டாலும் பயணம் தடைபடாது. அதற்கேற்ப இதில் எரிவாயுவில் இயங்கும் ஜெனரேட்டரை இயக்கி தொடர்ந்து பயணிக்க முடியும். இதுதவிர, ஸ்பார்க், பீட் உள்ளிட்ட மாடல்களின் எலக்ட்ரிக் மாடல் கார்களையும் ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

ஹூண்டாய் எலக்ட்ரிக் ஐ10: ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள தனது பிரபல ஐ10 மாடலின் எலக்ட்ரிக் மாடல் கார் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 16kWh திறன் கொண்ட பேட்டரியும் 49kWh திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகப்பட்சம் 130கி.மீ.,வேகத்தில் செல்லும் திறன் படைத்து. ஒரு முறை சார்ஜ் செய்தால் 160கி.மீ.,செல்லலாம்.

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...