பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20111229

502 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்து அமெரிக்க ரேஸர் சாதனை

Driving Record
புளோரிடா: கன்வென்ஷனல் என்று கூறப்படும் சாதாரண ரக பைக்கை மணிக்கு 502 கிமீ வேகத்தில் ஓட்டி அமெரிக்காவை சேர்ந்த பைக் ரேஸர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.

புளோரிடாவை சேர்ந்த பைக் ரேஸர் பில் வார்னர். இவர் சுஸுகி நிறுவனத்தின் ஹயபுசா பைக்கை 502 கிமீ வேகத்தில் ஓட்டி சாதனை புரிந்துள்ளார்.

அமெரிக்காவில் மெயினி என்ற இடத்தில் உள்ள விமானப்படை தளத்தில், அவர் இந்த சாதனையை புரிந்தார்.

அதிவேகமாக ஓட்டுவதற்கான பைக்குகள் ஆற்றல்வாய்ந்த எஞ்சின் மற்றும் பிரத்யேக வடிவமைப்பை கொண்டிருக்கும். ஆனால், சாதாரண ரகத்தை சேர்ந்த சுஸுகி ஹயபுசா பைக்கை இவ்வளவு வேகத்தில் ஓட்டியதே அவரது பெருமைக்கு முக்கிய காரணம்.

இதற்கு முன்பும் பில் வார்னர் ஹையபுசா பைக்கில் அதிவேகமாக ஓட்டி சாதனை புரிந்துள்ளார். அப்போது இவர் 448.36 கிமீ வேகத்தில் ஓட்டி சாதனை படைத்திருந்தார். அவரது முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார்.

இதுகுறித்து பில் வார்னர் கூறுகையில்,"பைக்கை 502கிமீ வேகத்திற்கு கொண்டு சென்றது எனக்கு பெரிய விஷயமாகவே இல்லை. ஆனால், ரன்வேயின் குறிப்பிட்ட தூரத்திற்குள் பைக்கின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்துவதுதான் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது," என்றார்.

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...