பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20111228

விண்டோஸ் 7ன் மீடியா பிளேயர்!

விண்டோஸ் மீடியா பிளேயர் விண்டோஸ் சிஸ்டத்துடன் நமக்குத் தரப்படும் சாதனமாகும். கணணி உபயோகப்படுத்தும் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் மென்பொருள் இதுவாகும்.
ஆனால் இதுவரை எக்ஸ்பி சிஸ்டத்தில் நமக்குக் கிடைத்து வந்த விண்டோஸ் மீடியா பிளேயருக்கும், தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கிடைக்கும் மீடியா பிளேயருக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.
இதனால் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு மாறும் பலர் புதிய அமைப்பினால் தடுமாறுகிறார்கள். அதில் முக்கியமான சில இயக்கங்களை இங்கு காணலாம்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்குபவர்கள், முதலில் விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கவும். Recommended Settings என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்த பின்னர் Finish என்பதில் கிளிக் செய்திடவும். இதில் என்ற ஆப்ஷனும் கிடைக்கும்.
ஆனால் அது இதில் அதிகம் அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே. அடுத்து மியூசிக் பிளேயர் சில சாம்பிள் மியூசிக் கோப்புடன் திறக்கப்படும். சீடி வழி பாடல் கேட்க, சீடியை அதன் ட்ரேயில் வைத்திடவும்.
விண்டோஸ் மியூசிக் பிளேயர் தானாகவே அதில் உள்ள இசை கோப்பை அடையாளம் கண்டு இசைக்கத் தொடங்கும். பின்னர கண்ட்ரோல் பட்டன்களுடன் ஒலியின் அளவு, இயக்கும் விதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
அப்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆல்பம் அல்லது பாடலைக்காண கீழாக வலது பக்கம் உள்ள ஐகானைக் கிளிக் செய்திட வேண்டும்.
பாடலை இயக்குகையில், சீடியை மியூசிக் பிளேயர் லைப்ரேரியில் கொண்டு செல்ல, வலது பக்கம் உள்ள சீடி அடையாளத்தில் கிளிக் செய்தால் போதும்.
இதில் சிறப்பு என்னவென்றால், சீடி இயக்கப்படும் போதே இதனை மேற்கொள்ளலாம். இந்த ரிப்பிங் செயல்பாடு முடிந்தவுடன், ஆல்பம் லைப்ரேரியில் பட்டியலிடப்படும்.
சீடியை உருவாக்க(“Burn”) அங்கு தரப்பட்டுள்ள Burn டேப்பினைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விருப்பப்படும் பாடல்களை இழுத்துவிட்டால் போதும்.

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...