பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20111229

இந்தோனேஷியாவில் புதிய அப்பாச்சியை பார்வைக்கு வைத்த டிவிஎஸ்

Tvs Apache
மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய அப்பாச்சி ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தோனேஷியாவில் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது டிவிஎஸ்.

டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான அப்பாச்சி இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்போர்ட்ஸ் பைக்காக திகழ்கிறது.

இருந்தாலும், அதிக விலை கொண்ட உதிரிபாகங்கள், மட் கார்டு சவுண்டு மற்றும் வசதியாக இல்லாத இருக்கைகள் ஆகியவை அப்பாச்சிக்கு மைனஸ் பாயிண்டுகளாக இருக்கின்றன.

யமஹா ஆர்15 மற்றும் 150சிசி பல்சருக்கு பெரும் போட்டியாக அப்பாச்சி இருந்தாலும், மேற்கண்ட காரணங்களால் குறிப்பிட்ட விற்பனை வளர்ச்சியை எட்ட முடியவில்லை.

இந்த நிலையில், மேற்கண்ட குறைகளை களைந்து சந்தை போட்டியை சமாளிக்கவும், விற்பனையை அதிகரிக்கவும் அப்பாச்சியை புத்தம் புதிய வடிவில் டிவிஎஸ் அறிமுகப்படுத்த உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதனிடையே எதிர்பார்ப்பை விஞ்சும் வகையிலான கம்பீரமான வடிவமைப்பு கொண்ட புதிய அப்பாச்சியை டிவிஎஸ் நிறுவனம் இந்தோனேஷியாவில் பார்வைக்கு கொண்டு வந்தது.

புதிய அப்பாச்சியின் டேங்க் தற்போதுள்ள அப்பாச்சி போன்று இருந்தாலும், ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றத்தை கொடுக்கும் வகையில் பைக் முழுவதும் கவர் செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அகலமான டயர்கள், சீறும் தோற்றத்துடன் முகப்பு பகுதி, ஸ்டெப்டு இருக்கைகள் ஆகியவை அப்பாச்சியை ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் பைக்காக மாற்றியுள்ளது. மேலும், அதிக அகலம் கொண்ட டயர்களும் கம்பீரத்தை கூட்டுகிறது.

இந்த பைக்கின் எஞ்சின் குறித்த விபரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் இல்லை. இருப்பினும், 220 சிசி எஞ்சினுடன் வரலாம் என்று மார்க்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், வரும் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள ஆட்டோ கண்காட்சியில் புதிய அப்பாச்சியை டிவிஎஸ் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்

இந்த தலைப்புகளில்...