பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் அறிவிப்பினை இங்கே இலவசகமாகவே வெளியிடலாம். உங்கள் குழந்தைகளின் புகைப்படம் மட்டும் பிறந்த நாள் விவரத்தினை தெளிவாக எமக்கு மின்னஞ்சல் செய்யவும். மின்னஞ்சல் முகவரி: ponseinilam@gmail.com
வணக்கம் !நீங்களும் நமது இணையத்தில் இணைந்து கொள்ளலாமே ? உங்கள் கதைகள்..கவிதைகள்..மாத்திரமன்றி தரமான உங்கள் பின்னூட்டங்கள்..விமர்சனங்கள் கூட நம் தமிழ்ப்பணியின் காலக் கட்டாயம் ! உங்கள் வரவைக் காண எதிர்பார்த்திருக்கிறோம்.-பொன்செய் நிலம்

20120305

நிழற் படக்கலையில் ஆர்வமா?


 

நம்மில் பலருக்கு கலையார்வம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்பவர்கள் மிகச்சொற்பமே...
அழகானவற்றை இரசிப்பவர்கள் எல்லோருமே தாங்களும் ஒருவிதத்தில் அந்தக் கலையில் தங்களை அறியாமல் புலமை பெற்றுவிடுகிறோம். தொடர்ந்து பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும் இரசிகன் தானாகவே கேள்வியறிவால் பாடக் கற்றுக்கொள்கிறான்.

நிழற்படக்கலையும் அப்படித்தான். நிழற்படங்களைக் காணும்போது அதிலிடம்பெறும் பொருட்களையும் மனிதர்களையும் வெறுமனே பார்த்து "ஓ... இதுவா அது, இவரா அவர்!" என கேள்விகேட்டுக் கொண்டிருக்காமல் அந்த நிழற்படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது, படமெடுக்கப்பட்டபோது வெளிச்ச அளவு எப்படி இருந்திருக்கிறது, இது வேறு கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கலாமோ? என்றெல்லாம் பார்க்க ஆரம்பித்து இப்போது நிழற்படக்கலையில் தன்னையும் அறியாமல் ஒரு பற்றை உருவாக்கிக் கொண்டுவிட்டேன். என்ன செய்வது அழகில் நாட்டமில்லாதவர் மனிதரே இல்லையென்றால், சிலருக்கு அந்த அழகைப் போல தானும் முயன்று ஓர் அழகை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போதே அவனும் கலைஞன் ஆகிவிடுகிறானே!


  • நிழற்படமெடுக்க விலையுயர்ந்த படக்கருவி வேண்டுமென்ற கட்டாயமில்லை. கையில் இருக்கும் நிழற்படத்திறன் கொண்ட செல்லிடப் பேசி கூடப் போதும் அல்லது ஒரு பாயிண்ட் அண்டு சூட் எனப்படும் சாதாரண நிழற்படக் கருவிகூடப் போதும். ஏனென்றால் நாம் நிழற்படமெடுக்கும் பொருளின் அல்லது காட்சியின் வடிவமைப்புதான் அந்த நிழற்படத்தில் அதிகம் பேசப்போகிறது.
  • நிழற்படமெடுக்கும் போது முடிந்தவரை கருவியை மாட்டிவைத்து எடுக்க ட்ரைப்பேட் எனப்படும் தாங்கி நிற்கும் முக்காலியைப் பயன்படுத்தவேண்டும். இயலாத நேரங்களில் வேண்டுமானால் தவிர்க்கலாம். புகைப்படக் கருவியின் அசைவால் ஏற்படும் கோளாறுதான் புகைப்படத்தைக் கெடுக்கும். கையில் கொண்டு எடுக்கும்போது கை நடுக்கத்தை நம்மால் தவிர்க்கவே முடியாது.
  • எங்கு சென்றாலும் முடிந்தவரை படக்கருவியை எடுத்துச் செல்வது இன்றியமையாதது. ஒரு நல்ல காட்சி உங்கள் கண்களில் எப்போது எங்கு படும் என்பதை அறிந்திருக்கவியலாது. எனவே தயக்கமின்றி எடுத்துச் செல்க.
  • படமெடுக்கும் முன்னர் உங்கள் கண்களால் ஒரு கலையுணர்வுடன் பார்த்து எந்தக் கோணத்தில் எடுத்தால் சிறப்பாய் வருமென்று ஊகித்துக்கொண்டு பின் ஆரம்பியுங்கள். ஆதவனின் ஒளி, விளக்கினால் உமிழப்படும் ஒளி நேரடியாக புகைப்படக் கருவியின் கண்மீது விழாமல் பார்த்துக் கொள்வது தேவையானது.
  • மிகவும் சிரம்ப்பட்டுக்கொண்டே ஒரு காட்சியைத் தவற விட்டுவிடலாகாது. முடிந்தவரை ஒன்றுக்கு நான்கு முறை ஒரே காட்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் பின்னர் அதில் எந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்று தெரிந்து அதை வைத்துக் கொள்ளலாம். காட்சிகளில் எளிமை இருத்தல் தேவையானது.
  • சாதாரணமாக வீட்டில் இருக்கும் நேரங்களில் உங்கள் புகைப்படக் கருவியின் எல்லா முறைகளையும், வசதிகளையும் தெரிந்தறிந்து கொள்ளுங்கள். ஒரே காட்சியை படக்கருவியின் வெவ்வேறு அமைப்புக்களில் வைத்து எடுத்துப் போட்டுப் பாருங்கள் எந்த இடத்துக்கு எந்த அமைவு சரியாய் வருகிறதென்று. அந்த அமைவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் புகைப்படம் எடுத்துத் தள்ளுங்கள். சளைக்கவே செய்யாதீர்கள்.
  • பொது இடங்களில் எங்கெங்கே புகைப்படம் எடுப்பதற்கு தடையிருப்பதைப் புரிந்துகொள்ளுங்கள், அதே சமயத்தில் படமெடுக்கக் கூச்சமே படாதீர்கள். வெட்கப்பட்டால் கலைஞனாகவே ஆகவியலாது.
  • புகைப்படக் கருவியை அடிக்கடி துடைத்து சீராய் வைத்துக் கொள்ளுங்கள். எடுத்த படங்களை ஒருங்கிணைத்து குறுவட்டில் அல்லது சேமிப்புத் தகடுகளில் எழுதிவைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை நாள்வாரியாக, இடம்வாரியாக போட்டு வையுங்கள்.

           பொன்னு. கணேஷ்குமார், கோவை.

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள்